மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர் சடலமாக மீட்பு

மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர் சடலமாக மீட்பு

களுத்துறையில் நபர் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

களுத்துறை , மீகதென்ன - வல்லாவிட உள்ளூராட்சி சபையில் மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர் சடலமாக மீட்பு | Member Of Liberation Recovered As A Dead Bodyஅந் நபர் பிரதேசத்தில் உள்ள கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெலிபன்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் வலல்லாவிட்ட, போபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 70 வயதுடைய ஐ.ஏ.வீரசிறி என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

 

உயிரிழந்தவர் வெலிப்பன்ன, ஊராகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு சென்றிருந்த போதே அவர் காணாமல் போனமை தொடர்பில் நேற்று முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது அருகில் உள்ள கால்வாயில் இருந்து சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.