மனைவியை கொலை செய்துவிட்டு தன்னுயிரை மாய்த்துக் கொண்ட கணவன்!

மனைவியை கொலை செய்துவிட்டு தன்னுயிரை மாய்த்துக் கொண்ட கணவன்!

கொஸ்கம - பூகொட, மண்டாவல பிரதேசத்தில் குடும்பத் தகராறு காரணமாக கணவன் மனைவியின் கழுத்தை வெட்டி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, வீட்டுக்குள் வைத்து கணவரே தனது மனைவியின் கழுத்தை நேற்றிரவு வேளையில் (23.10.2023) அறுத்து கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேகத்தின் பேரில் கணவனை கைது செய்ய பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது அவர் வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மனைவியை கொலை செய்துவிட்டு தன்னுயிரை மாய்த்துக் கொண்ட கணவன்! | The Husband Killed His Wife And Committed Suicide

கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு 46 வயது எனவும், உயிரை மாய்த்துக் கொண்டவருக்கு 54 வயதெனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

விசாரணையில் இருவருக்கும் இடையே சில காலமாக தகராறு இருந்து வந்தது தெரியவந்தது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூகொட பொலிஸார் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.