தமிழர் பகுதியில் மது அருந்திய இடத்தில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்!

தமிழர் பகுதியில் மது அருந்திய இடத்தில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்!

திருகோணமலை - ஈச்சிலம்பற்று பகுதியில் ஆண்ணொருவர் சடலம் ஒன்று இன்றையதினம் (23-10-2023) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஈச்சிலம்பற்று - முத்துச்சேனை பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான 35 வயதான கே.சதீஸ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

தமிழர் பகுதியில் மது அருந்திய இடத்தில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்! | Family Man Dead Body Found In Trincomalee

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்றிரவு (22-10-2023) 3 பேர் சேர்ந்து மதுபானம் அருந்தியதாகவும், மற்றைய இருவரும் வீடுகளுக்கு சென்றதாகவும் குறித்த நபர் மது அருந்திய இடத்தில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.

தமிழர் பகுதியில் மது அருந்திய இடத்தில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்! | Family Man Dead Body Found In Trincomaleeஉயிரிழந்தவரின் வலது காதில் இரத்தம் கசிந்து காணப்படுவதாகவும் சம்பவ இடத்துக்கு மூதூர் நீதிமன்ற பதில் நீதவான் எம்.ஏ.சீ.மஹ்ரூப் சென்று பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.

குறித்த மரணம் தொடர்பில் அவருடன் மது அருந்திய நபர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.