7 நாடுகளுக்கு விசா இன்றி இந்நாட்டிற்கு பிரவேசிக்க அனுமதி.

7 நாடுகளுக்கு விசா இன்றி இந்நாட்டிற்கு பிரவேசிக்க அனுமதி.

முன்னோடித் திட்டமாக 7 நாடுகளுக்கு விசா இல்லாமல் இந்நாட்டிற்கு பிரவேசிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வருடம் மார்ச் 31ஆம் திகதி வரை இந்தச் சலுகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 நாடுகளுக்கு விசா இன்றி இந்நாட்டிற்கு பிரவேசிக்க அனுமதி | You Can Enter These 7 Countries Without A Visa

இதனை சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது ட்விட்டர் தளத்தில் பதிவொன்றை மேற்கொண்டு குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு விசா இன்றி இந்நாட்டிற்கு பிரவேசிக்க அனுமதிக்கப்படுகிறது.