முன்னாள் காதலனின் வெறி; யுவதியும் இளைஞனும் படுகொலை.

முன்னாள் காதலனின் வெறி; யுவதியும் இளைஞனும் படுகொலை.

மொனராகலையில் ஒரே பிரதேசத்தில் 5 நாட்களுக்குள் யுவதி ஒருவரும் இளைஞர் ஒருவரும் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொடூர சம்பவம் மொனராகலை மாவட்டம், மதுள்ளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் காதலர்கள் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

முன்னாள் காதலனின் வெறி; யுவதியும் இளைஞனும் படுகொலை | Ex Boyfriend Frenzy Young And Young Man Massacredமதுள்ளை பிரதேசத்தில் கடந்த வியாழக்கிழமை 22 வயதுடைய எஸ்.சதுரிகா என்ற யுவதி கூரிய ஆயுதத்தால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை 24 வயதுடைய ஆர்.குமாரசிறி என்ற இளைஞர் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

யுவதியின் முன்னாள் காதலன் தலைமையிலான குழுவினர் இந்தக் கொலைகளைச் செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

முன்னாள் காதலன் எனச் சந்தேகிக்கப்படும் 27 வயதுடைய இளைஞர் அப்பிரதேசத்தில் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.