இலங்கையில் தவளைகளின் குருதியைக் குடிக்கும் புதிய வகை நுளம்பு!

இலங்கையில் தவளைகளின் குருதியைக் குடிக்கும் புதிய வகை நுளம்பு!

தவளைகளின் குருதியைக் குடிக்கும் புதிய வகை நுளம்பு இனம் ஒன்று இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தின் மீரிகம பிரதேசத்திலேயே இந்த புதியவகை நுளம்பினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Uranotaenia Trilineata என அடையாளம் காணப்பட்டுள்ள இந்த தவளையினமானது, இலங்கையில் தற்போது பதிவாகியுள்ள  நுளம்பினங்களில் சிறிய வகை நுளம்பு இனமாகும் என பூச்சியியல் அதிகாரி கயான் ஸ்ரீ குமாரசிங்க தெரிவித்தார்.

இந்த நுளம்பினமானது 2-3 மில்லிமீற்றர் அளவுள்ளவை எனவும், இந்த நுளம்பினத்துடன் சேர்த்து இலங்கையில் இனங்காணப்பட்டுள்ள நுளம்பு இனங்களின் எண்ணிக்கை 156 ஆக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தவளைகளின் குருதியைக் குடிக்கும் புதிய வகை நுளம்பு! | New Mosquito Species Detected In Sri Lanka

சுமார் 108 வருடங்களுக்கு முன்னர் தென் கொரியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த நுளம்பு இனம் பின்னர் தாய்லாந்தில் கண்டறியப்பட்டு தற்போது இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.