சிறுமியைக் காப்பாற்ற கிணற்றில் குதித்த தாய்; இருவரும் உயிரிழப்பு

சிறுமியைக் காப்பாற்ற கிணற்றில் குதித்த தாய்; இருவரும் உயிரிழப்பு

வாரியபொல வல்பொல பிரதேசத்தில் வசிக்கும் 6 வயதான மகளும் அவரது தாயும் வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குருணாகல் பாதுகாப்பு சேவை கல்லூரியில் முதலாம் தரத்தில் கல்வி பயின்ற ஆர்.எம். கோவித சாரமித் (6) தாயான லக்மாலி வீரசிங்க (37) ஆகியோரே உயிரிழந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமியைக் காப்பாற்ற கிணற்றில் குதித்த தாய்; இருவரும் உயிரிழப்பு | Did Mother Jump Into The Well To Save The Childஇவர்கள் இருவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றில் குளிப்பதற்குச் சென்றதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

கிணற்றில் வீழ்ந்த சிறுமியைக் காப்பாற்ற தாய் கிணற்றில் குதித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சிறுமியின் தந்தை கடற்படையில் பணிபுரிவதாகவும் அவர் தூர மாகாணத்தில் இருப்பதால் தாயும் மகளுமே மட்டுமே வீட்டில் நேரத்தைக் கழிப்பதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.