போதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்யும் பொலிஸாருக்கு கொடுப்பனவு!

போதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்யும் பொலிஸாருக்கு கொடுப்பனவு!

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்யும் ஒவ்வொரு பொலிஸாருக்கும் 5,000 ரூபா வெகுமதியாக வழங்கும் முன்னோடி திட்டத்தை செயல்படுத்த போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது.

போதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்யும் பொலிஸாருக்கு கொடுப்பனவு! | Paying Police Who Arrest Drunk Driversஇந்த திட்டம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி வரை செயற்படுத்தப்படும், இந்தக் காலகட்டத்தில், மதுபோதையில் வாகனம் செலுத்தும் ஒருவரை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு அவரது சம்பளத்தில் 5,000 ரூபா கூடுதல் கொடுப்பனவாக வழங்கப்படும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹபுகொட இதனை தெரிவித்துள்ளார்.

அதிகாரிகளை ஊக்குவிக்கவும் விபத்துகளைத் தடுக்கவும் இந்த வெகுமதி கொடுக்கும் முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டதாக பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார்.