தப்பிச் சென்ற நபர் கண்டுபிடிக்கப்பட்டார்.. காணொளி
IDH மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் கொழும்பு தேசிய மருத்துவமனையின் வெளி நோயாளர் பிரிவில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
update................
தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளரை கண்டுபிடிப்பதற்கு புலனாய்வு பிரிவினர் மற்றும் இராணுவ குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
update...............
IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது, மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவற்துறை ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.
update...............
IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது, மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற நபர் ஒருவர் தொடர்பில் காவற்துறை பொதுமக்களின் உதவியினை கோரியுள்ளது.
சந்தேக நபரை அடையாளம் கண்டால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு 0718591017,0718592290,0718591864 அல்லது 119 தொடர்பினை மேற்கொள்ளுமாறு காவற்துறை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.