மட்டக்களப்பில் நடிகர் விஜய் படத்தை பார்க்கச் சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த நிலை!

மட்டக்களப்பில் நடிகர் விஜய் படத்தை பார்க்கச் சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த நிலை!

மட்டக்களப்பில் நடிகர் விஜய் நடித்து வெளியான லியோ படத்தை பார்க்கச் சென்ற இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு கைலகலப்பாக மாறி வாள் வெட்டில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு - செங்கலடி திரையரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை (20) அவ் வாள் வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மட்டக்களப்பில் நடிகர் விஜய் படத்தை பார்க்கச் சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த நிலை! | Youths Who Went To See The Movie Leo In Batticaloaஇச் சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதில் 4 பேர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் ஒருவர் மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.