இளைய சகோதரனை கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணன்.

இளைய சகோதரனை கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணன்.

கொழும்பு, கிருலப்பனையில் சகோதரனை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் மற்றுமொரு சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட நபர் ஐஸ் மற்றும் ஏனைய போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைய சகோதரனை கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணன் | Younger Brother Stabbed To Deathதனது தாயிடம் பணம் கேட்டு வாக்குவாதம் செய்த காரணமாக ஏற்பட்ட மோதலில் சந்தேக நபர் வீட்டில் இருந்த மரக்கறி வெட்டும் கத்தியினால் இளைய சகோதரனின் மார்பில் குத்தி கொலை செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஹைலெவல் வீதியைச் சேர்ந்த ஆர். ஏ அமில சந்தருவன் என்ற 29 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என தெரிவிக்கப்படுகிறது.

32 வயதுடைய சந்தேக நபரான மூத்த சகோதரனை பொலிஸார் கத்தியுடன் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கிருலப்பனை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.