நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருவிழா நேரலையாக ஒளிபரப்பு!
ரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்ற திருவிழா நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று ஆலய தர்மகர்த்தா சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெறவுள்ள 2020ஆம் ஆண்டு நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருவிழாவில் கொரோனா நோய் பரவலை தடுக்கும் உபாயமாக அதிகளவு பக்தர்கள் ஆலயத்திற்கு வருவதனை தவிர்த்து, முருகப்பெருமானின் கொடியேற்ற நிகழ்வினை தூர தரிசனம் செய்யும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி ஆலய கொடியேற்ற தினத்தன்று இடம்பெறும் முக்கிய நிகழ்வுகளை இலவசமாக ஆலய உத்தியோகபூர்வ தளமான https://www.youtube.com/channel/UCmKSl9nBdK-3SRzJEpERINQ/featured ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.