தபால் மூலம் வாக்களிப்பதற்கு தவறியவர்களுக்கு 2 நாள் சந்தர்ப்பம்

தபால் மூலம் வாக்களிப்பதற்கு தவறியவர்களுக்கு 2 நாள் சந்தர்ப்பம்

பால் மூலம் வாக்களிப்பதற்கு தவறிய அரச ஊழியர்களுக்கு  இன்றும் (வெள்ளிக்கிழமை) நாளையும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தபால் மூலம் வாக்களிப்பு இன்று காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.00 மணிவரையிலும் இடம்பெறும்.

அதேபோன்று  நாளை சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு  ஆரம்பமாகி பிற்பகல் 2.00 மணி வரையிலும் வாக்களிப்பு இடம்பெறும்.

அந்தவகையில் அரச ஊழியர்கள் அனைவரும், தங்களது மாவட்டத்தில் அமைந்துள்ள மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்தில் தமது வாக்குகளை பதிவு செய்ய முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்காக இம்முறை 705,085 அரச ஊழியர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.