உலக நாடுகளில் சந்தோஷமாக வாழக் கூடிய நாடுகளின் பட்டியல் வெளியானது

உலக நாடுகளில் சந்தோஷமாக வாழக் கூடிய நாடுகளின் பட்டியல் வெளியானது

சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டினர்கள் சந்தோஷமாக நிம்மதியாக வாழலாம் என HSBC Expat Explorer நடத்திய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

163 இடங்களில் வசிக்கும் 33 நாடுகளை சேர்ந்த 18,000 பேரிடம் நடத்திய ஆய்வில் சுவிட்சர்லாந்து முதலிடம் பிடித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டிகள் நல்ல வருமானத்துடன் தாங்கள் விரும்பிய வாழ்க்கையை இங்கு வாழலாம் என கூறப்படுகிறது.

தங்களுடைய சொந்த நாட்டை போன்று சுவிட்சர்லாந்தில் பத்திரமாக இருப்பதாக 67 சதவிகித மக்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் அரசியலும், பொருளாதாரத்தின் சீரான நிலையும் இதற்கு மிக முக்கியமான காரணமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

அதாவது உலகளில் சராசரி வருமானம் $75,966ஆக இருக்கும் நிலையில் சுவிட்சர்லாந்தில் மட்டும் $111,587 ஆக இருக்கிறது.

நாடுகளின் பட்டியல்

 

  1. சுவிட்சர்லாந்து
  2. சிங்கப்பூர்
  3. கனடா
  4. ஸ்பெயின்
  5. நியூசிலாந்து