குடிபோதையில் தாயை தாக்கிய நபருக்கு நேர்ந்த சோகம்.

குடிபோதையில் தாயை தாக்கிய நபருக்கு நேர்ந்த சோகம்.

வெல்லவ பிரதேசத்தில் நபர் ஒருவர் தந்தை மற்றும் சகோதரரால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக வெல்லவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெல்லவ, கிரிதிவெல்மட பிரதேசத்தில் நேற்று இரவு 8.30 மணியளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குடிபோதையில் தாயை தாக்கிய நபருக்கு நேர்ந்த சோகம் | Man Who Attacked His Mother While Drunk41 வயதான சுமேத ஹேமந்த குமார என்பவரே தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந் நபரை 75 வயதுடைய தந்தையும் 43 வயதுடைய சகோதரரும் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந் நபர் குடிபோதையில் வீட்டிற்கு வந்து தனது தாயை தாக்கியதாகவும் இதனால் ஆத்திரமடைந்த இருவரும் அவரை தாக்கியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வெல்லவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.