வவுனியாவில் காணாமல்போன தந்தை: தவிக்கும் 4 பிள்ளைகள்!

வவுனியாவில் காணாமல்போன தந்தை: தவிக்கும் 4 பிள்ளைகள்!

வவுனியா - முருகனூர் கிராமத்தில் வசித்து வரும் அன்டன் ஜொன்சன் என்பவரை காணவில்லை என தெரிவித்து அவரின் மனைவி சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த நபர் வீட்டிலிருந்த கடந்த 04.10.2023 அன்று காலை 9.30 மணியளவில் வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் இன்று வரை வீடு திரும்பவில்லை.

வவுனியாவில் காணாமல்போன தந்தை: தவிக்கும் 4 பிள்ளைகள்! | Family Man Missing Vavuniya 4 Children In Distress

இதனையடுத்து அவரின் மனைவியினால் கணவரை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

வீட்டிலிருந்து அவர் வெளியேறுகையில் நீல நிறம் சரம் மற்றும் ரோஸ் கலர் சட்டையும் அணிந்து சென்றிருந்தார்.

இந்நிலையில், இவரை கண்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 0776289460, 0774136383, 0762477411 ஆகிய இலக்கத்திற்கு அறிவித்து உதவுமாறு தெரிவித்துள்ளனர்.