தமிழர் பகுதியில் பரிதாபமாக உயிரிழந்த 9 வயது மாணவன்! சிறுமி வைத்தியசாலையில்.
வவுனியாவில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் காயமடைந்த மாணவன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (03-10-2023) மதியம் புதுக்குளத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து சம்பவத்தில் 9 வயதான வி. டினோஜன் என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பாடசாலை முடிவடைந்த நேரம் உறவினர் ஒருவர் தனது 7 வயது மகள் மற்றும் 9 வயதுடைய குறித்த சிறுவனையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றபோதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இந்த விபத்தில் புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தில் கல்வி பயிலும் வி. டினோஜன் 9 வயது மற்றும் 7 வயது மாணவியும் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இருப்பினும், வி.டினோஜன் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விழுந்ததால் ஏற்பட்ட விபத்தா அல்லது அதே திசையில் வந்த டிப்பர் வாகனத்தில் மோதுண்டு ஏற்பட்ட விபத்தா என ஈச்சங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.