யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இரண்டு இளைஞர்கள் கைது
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பால்பண்ணை பகுதியில் இரண்டு இளைஞர்கள் இன்றையதினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டிலேயே இரு இளைஞர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் இரு இளைஞர்களும் வசமாக சிக்கினர்.
கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் அதே இடத்தைச் சேர்ந்த 18 மற்றும் 19 வயதை உடையவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களிடமிருந்து 80 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளை மீட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.