மட்டக்களப்பில் சிறுமியை கர்ப்பமாக்கிய 18 வயது காதலன்.

மட்டக்களப்பில் சிறுமியை கர்ப்பமாக்கிய 18 வயது காதலன்.

 மட்டக்களப்பில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 18 வயது காதலனை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் நேற்று வெள்ளிக்கிழமை (29) உத்தரவிட்டார்.

காதலனை எதிர்வரும் 12 ம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் சிறுமியை கர்ப்பமாக்கிய 18 வயது காதலன் | Boyfriend Who Made Girl Pregnant In Batticaloa15 வயதும் 9 மாதம் கொண்ட சிறுமிக்கு ஏற்பட்ட வயிற்றுவலி காரணமாக அவரை அவரது பெற்றோர் வைத்தியசாலையில் சம்பவதினமான 28ம் திகதி வியாழக்கிழமை அனுமதித்தனர்.

சிறுமியை பரிசோதனை செய்த வைத்தியர்கள் அவர் கர்ப்பம் தரித்துள்ளதாக கண்டறிந்தனர். சிறுமி அதேபிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய காதலன் உடன் ஏற்பட்ட உடல்உறவு காரணமாக கர்ப்பமாகியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து குறித்த இளைஞனை நேற்றைய தினம் கைது செய்த நிலையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.