தாயின் ஐடியுடன் காதலனை சந்திக்க விடுதிக்குச் சென்ற மகள்; பின்னர் நேர்ந்த சம்பவம்.

தாயின் ஐடியுடன் காதலனை சந்திக்க விடுதிக்குச் சென்ற மகள்; பின்னர் நேர்ந்த சம்பவம்.

தாயின் தேசிய அடையாள அட்டையை (ID) எடுதுக்கொண்டு காதலனுடன் விடுதி ஒன்றிற்கு சென்ற யுவதி ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.சம்பவம் தொடர்பில் மேல்யும் தெரியவருகையில்,

தென் மாகாணத்தைச் சேர்ந்த காதலன் மற்றும் காதலியின் குடியிருப்புகளுக்கும் இடையே உள்ள தூரம் காரணமாக ஒருவரை ஒருவர் சந்திக்க முடியவில்லை. இந்நிலையில் பிரத்தியேக வகுப்புக்குச் செல்லும் காதலி செல்லும் போது இருவரும் சந்திக்க திட்டமிட்டு, அதற்கான திகதியையும் குறித்தனர்.

தாயின் ஐடியுடன் காதலனை சந்திக்க விடுதிக்குச் சென்ற மகள்; பின்னர் நேர்ந்த சம்பவம் | Daughter Meet Boyfriend With Mother S Idஇந்நிலையில் காதலியின் நண்பிகள் இருவர் மற்றும் அவர்களது காதலர்களும் பயணத்தில் இணைந்தனர். தன்னை சந்திக்க வரும் போது அடையாள அட்டையை கொண்டு வருமாறு காதலியிடம் கூறிய நிலையில் அடையாள அட்டை இல்லாததால் காதலி  தாய்க்கு தெரியாமல் தாயின் அடையாள அட்டையை எடுத்து காதலனை சந்திக்க சென்றுள்ளார்.

காதலர்கள் குழு ஒரு கடலோர நகரத்திற்கு வந்து, கடற்கரைக்கு அருகில் உள்ள ஒரு விடுதிக்குச் சென்ற நிலையில், விடுதியில் இளம் ஜோடிகள் இருப்பதை கவனித்த பாதுகாப்பு அதிகாரிகள் விடுதியில் சோதனை நடத்தினர்.

இதன்போது அடையாள அட்டையை அதிகாரிகள் கேட்க , காதலன் தனது சட்டைப் பையில் இருந்த அடையாள அட்டையை அதிகாரிகளிடம் கொடுக்க காதலியும் தாயாரின் அடையாள அட்டையை கொடுத்துள்ளார்.

தாயின் ஐடியுடன் காதலனை சந்திக்க விடுதிக்குச் சென்ற மகள்; பின்னர் நேர்ந்த சம்பவம் | Daughter Meet Boyfriend With Mother S Idஇரண்டு அடையாள அட்டைகளையும் பெற்றுக்கொண்ட அதிகாரிகள், காதலியின் பெயர் என காதலனிடம் அதிகாரிகள் கேட்டபோது, ​​காதலன் சொன்ன பெயருக்கும் அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பெயரும் வேறு வேறாக இருந்ததால், காதலியின் அடையாள அட்டையை மீண்டும் சோதனை செய்தனர்.

தாயின் ஐடியுடன் காதலனை சந்திக்க விடுதிக்குச் சென்ற மகள்; பின்னர் நேர்ந்த சம்பவம் | Daughter Meet Boyfriend With Mother S Idஅது இளம்பெண்ணின் அடையாள அட்டை அல்ல, ஐம்பத்து மூன்று வயது பெண்ணின் அடையாள அட்டை என்பதை அறிந்த அதிகாரிகள் பெண்னிடம் முன்னெடுத்த விசாரணையில், காதலனை சந்திக்க தாயின் அடையாள அட்டையை கொண்டு வந்தது தெரியவந்தது.

அதனையடுத்து அந்த யுவதியை அதிகாரிகள் எச்சரித்து சென்ற நிலையில் பெண்ணின் தோழிகள் மற்றும் காதலர்கள் அதிகாரிகள் வெளியேறிய பின்னர் கேலி செய்ததோடு, நண்பர்கள் ஊடாக இந்த தகவல் வெளியில் கசிந்துள்ளது.