பேருந்திலிருந்து கீழே வீழ்ந்த நபருக்கு நேர்ந்த சோகம்.

பேருந்திலிருந்து கீழே வீழ்ந்த நபருக்கு நேர்ந்த சோகம்.

புளத்சிங்களவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்திலிருந்து ஒருவர் கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (26) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்திலிருந்து கீழே வீழ்ந்த நபருக்கு நேர்ந்த சோகம் | Man Death Fell Of The Busபுளத்சிங்கள, கலஹேன பிரதேசத்தில் வசிக்கும் கொக்கல ஆராச்கே ரம்ய குமார என்ற 42 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புளத்சிங்கள நாரகல பிரதேசத்தில் பேருந்திலிருந்து தவறி வீழ்ந்த இவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி ஹொரண ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.