புலம்பெயர்வோரைத் தடுப்பதற்கு சுவிஸ் அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு!
இத்தாலியில் இருந்து வரும் புலம்பெயர்வோரைத் தடுப்பதற்காக ஒரு மாகாணத்தின் எல்லைக்கு கூடுதல் அதிகாரிகளை அனுப்புவதற்கு சுவிஸ்சர்லாந்து அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இத்தாலியிலிருந்து, சுவிஸில் உள்ள Ticino மாகாணம் வழியாக அதிகமான புலம்பெயர்வோர் நுழைய முற்படலாம் என சுவிஸ்சர்லாந்து அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
இந்நிலையில், தெற்கு எல்லைக்கு கூடுதல் அதிகாரிகளை அனுப்புவதாக, பெடரல் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை, 12 ஆயிரம் புலம்பெயர்வோர் இத்தாலியின் Lampedusa தீவுக்கு வந்து சேர்ந்துள்ள நிலையில், குறித்த தீலிருந்து அவர்கள் Ticino மாகாணம் வழியாக சுவிஸுக்குள் நுழைய முயற்சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட எல்லைக்கு கூடுதல் அதிகாரிகள் அனுப்பிவைக்கப்பட்டவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.