உலக முடிவில் பிறந்தநாளைக் கொண்டாடிய இளைஞர்களுக்கு நேர்ந்த விபரீதம்..!
மடூல்சீமை - எலமான் பகுதியில் அமைந்துள்ள சிறிய உலக முடிவு பகுதிக்கு அருகாமையில், மது அருந்தி கொண்டிருந்த ஐவர் அடங்கிய குழுவினரில் இருவர் பள்ளத் தாக்கில் வழுக்கி விழுந்து படுகாயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், நேற்றுமுன்தினம் இளைஞர் ஒருவர் தனது 25 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக மடூல்சீமை, எலமான் சிறிய உலக முடிவு பகுதிக்கு அருகாமையில் சானுவ பகுதியில் தனது நண்பர்கள் சகிதம் மது அருந்திக் கொண்டிருந்த வேளை கற்பாறையில் இருந்து வழுக்கி விழுந்துள்ளார்.
அவரைக் காப்பாற்றச் சென்ற மற்றைய நபரும் விழுந்து படுகாயமடைந்த நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் 25 வயதுடைய பசறை பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மடூல்சீமை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.