பாணின் விலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்..!

பாணின் விலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்..!

பாண் ஒன்றின் விலையை 100 ரூபாவாக குறைக்க எதிர்பார்த்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், பல்வேறு வகையான வரிகள் மற்றும் டொலரின் பெறுமதி காரணமாக பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு பாணின் விலையை 100 ரூபா அல்லது அதற்கும் குறைவாகவே பேணுவதே தமது சங்கத்தின் ஒரே நம்பிக்கை ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் முயற்சியின் கீழ் எதிர்காலத்தில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமார் 100 ரூபாவிற்கு 450 கிராம் பாணை வழங்க ஏற்பாடு செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாணின் விலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம் | Bread New Price In Sri Lanka

அரசாங்கம் தலையிட்டால் நிச்சயமாக 100 ரூபாவிற்கு ஒரு பாணை வழங்குவதுடன் ஒரு பன்னின் விலையில் 10 அல்லது 15 ரூபாவை குறைக்க முடியும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டினார்.