கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட ஆபத்தான நபர்கள்..!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட ஆபத்தான நபர்கள்..!

இலங்கையை விட்டு தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல்வேறு குற்றச் சாட்டுகளுக்காக நீதிமன்றத்தினால் விமானப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள மூவரும், இலங்கை கடற்படையிலிருந்து தப்பிச் சென்ற சிப்பாய் ஒருவரும் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

நேற்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் சோதனையிட்ட குடிவரவு அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட ஆபத்தான நபர்கள் | 4 Person Arrested Katunayake Airportஇவர்களில் வென்னப்புவ உதசிரிகம பொலிஸ் பிரிவில் வசிக்கும் 49 வயதான சுஜீவ பிரசன்ன பெர்னாண்டோ என்பவர் தனது மகளை துஷ்பிரயோகம் செய்துவிட்டு இத்தாலிக்கு தப்பி செல்ல முயற்சித்த நிலையில் கைது செயயப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இத்தாலியில் வாழ்ந்து வரும் நிலையில் சமீபத்தில் ஒரு சிறிய விடுமுறைக்காக இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

 

 

 

மேலும், மன்னார் சிலாவத்துறை நீதவான் நீதிமன்றம், நீர்கொழும்பு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் இலங்கை கடற்படையினரால் விமானப் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்த மூவர், நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது, ​​குடிவரவு அதிகாரிகள் மற்றும் விமான நிலையப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட ஆபத்தான நபர்கள் | 4 Person Arrested Katunayake Airport