முல்லைத்தீவில் பூட்டிய வீடொன்றிற்குள் இருந்து சடலம் மீட்பு ..!

முல்லைத்தீவில் பூட்டிய வீடொன்றிற்குள் இருந்து சடலம் மீட்பு ..!

முல்லைத்தீவு - மல்லாவி பொலிஸ் பிரிவிட்குட்பட்ட பகுதியில் உள்ள வீட்டில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.  

பூட்டிய வீடொன்றிற்குள் இருந்து (23.09.2023) இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதே பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய உத்தமன் என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர். 

அயலவர்களால் சடலம் அவதானிக்கப்பட்டு மல்லாவி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

முல்லைத்தீவில் பூட்டிய வீடொன்றிற்குள் இருந்து சடலம் மீட்பு (Photos) | Mullaitivu Mallaavi Dheraankandal Dead Body

இதனை அடுத்து சம்பவம் தொடர்பாக மல்லாவி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

GalleryGallery