உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பரிசுத் தொகை இவ்வளவா! வெளியான அறிவிப்பு.
2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் 5 ஆம் திகதி 2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியாவில் ஆரம்பமாக உள்ளது.
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பங்களாதேஷ், அப்கானிஸ்தான், என 10 அணிகள் பங்கேற்கவுள்ளது.
இந்நிலையில், குறித்த போட்டியின் மொத்தப் பரிசுத் தொகை 10 மில்லியன் டொலர்கள் என ஐசிசி தெரிவித்துள்ளது.
சாம்பியன்ஷிப்பை வெல்லும் அணிக்கு 04 மில்லியன் டொலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ள நிலையில், இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் அணிக்கு 02 மில்லியன் டொலர்கள் வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.