கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர் கைது..!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர் கைது..!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு கோடி 30 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவர முயன்ற ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு திணைக்கள அதிகாரிகள் இன்று காலை குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

இவர் காலி பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதான வர்த்தகர் ஆவார். டுபாயிலிருந்து இன்று காலை 05.30 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-226 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர் கைது | Gold Caught At Katunayake Airport

விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துக் கொண்டு அவர் விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் போது, ​​போதைப்பொருள் தடுப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு அவரது பயணப் பையில் இந்த 616 கிராம் தங்க பிஸ்கட்டுகளைக் கண்டுபிடித்து அவரைக் கைது செய்தனர்.

இந்த பயணி மற்றும் அவர் சட்டவிரோதமாக கொண்டு வந்த தங்க பிஸ்கட்டுகள் அனைத்தும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர் கைது | Gold Caught At Katunayake Airport