வவுனியா இரட்டை கொலை விவகாரம் மேலும் மூவருக்கு பகிரங்க பிடியாணை!

வவுனியா இரட்டை கொலை விவகாரம் மேலும் மூவருக்கு பகிரங்க பிடியாணை!

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 6 பேரில் ஒருவர் அடையாள அணிவகுப்பின் போது அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும், தலைமறைவாகியுள்ள மூவருக்கு வவுனியா நீதிமன்றம் இன்று (21.09) பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளது. 

அந்த பகுதியில் கடந்த யூலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெட்ரோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சம்பவத்தில் இருவர் மரணமடைந்திருந்தனர். 

குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் ஆறு பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

வவுனியா இரட்டை கொலை விவகாரம் மேலும் மூவருக்கு பகிரங்க பிடியாணை! | The Vavuniya Double Murder Case Identified

அத்துடன், எரிகாயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த யுவதி ஒருவரை தான் கண்டதாகவும் அவரை அடையாளம் காட்ட முடியும் எனவும் விசாரணையின் போது தெரிவித்திருந்தார்.

வவுனியா இரட்டை கொலை விவகாரம் மேலும் மூவருக்கு பகிரங்க பிடியாணை! | The Vavuniya Double Murder Case Identified

அதனடிப்படையில் கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களுக்கான அடையாள அணிவகுப்புக்கு திகதியிடப்பட்டிருந்தது. 

குறித்த சம்பவத்தில் எரிகாயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த யுவதி இன்று (21.09) இடம்பெற்ற அடையாள அணிவகுப்பின் போது தாக்குதலில் ஈடுபட்ட ஒருவரை அடையாளம் காட்டியுள்ளார்.

மேலும், மூன்று சந்தேக நபர்களுக்கு எதிரான சாட்சியங்கள் உறுதிப்படுத்தப்பட்டமையினால் அவர்களை கைது செய்ய குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

குறித்த மூவரும் தலைமறைவாகவுள்ளதால் அவர்களை கைது செய்ய பகிரங்க பிடியாணை உத்தரவு வவுனியா நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கு விசாரணை எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது.