தென்னிலங்கையில் பெண் ஒருவரின் புகைப்படத்தால் ஏற்பட்ட விபரீதம்..!

தென்னிலங்கையில் பெண் ஒருவரின் புகைப்படத்தால் ஏற்பட்ட விபரீதம்..!

மத்துகம பிரதேசத்தில் பெண்ணொருவர் பாலியல் நடவடிக்கைக்காக இன்னுமொரு பெண்ணின் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட சம்பவத்தால் வன்முறை ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் நபர் ஒருவர் மீது அசிட் வீசி தாக்கிய இருவரைக் கண்டுபிடிக்க விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்துகம பொலிஸார் தெரிவித்தனர்.

மத்துகம பின்னகொட பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணொருவர் பாலியல் நடவடிக்கை்காக இன்னுமொரு பெண்ணை பணத்திற்கு விற்பனை செய்வதாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதற்கமைய, இருவரது கணவர்கள் மற்றும் பெண் ஒருவரின் தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் அசிட் வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தென்னிலங்கையில் பெண் ஒருவரின் புகைப்படத்தால் ஏற்பட்ட விபரீதம் | Facebook Girls Photo Issue

பொலிஸாரைத் தவிர்த்து வரும் சந்தேகநபர்கள் இருவரும் மாமா, மருமகன் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அசிட் வீச்சுக்கு இலக்கான மத்துகம பின்னகொட ஹேமலோக மாவத்தையைச் சேர்ந்த நபர் ஒருவர் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது கண்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

களுத்துறை குற்றத்தடுப்பு ஆய்வு கூட அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டனர்.

தென்னிலங்கையில் பெண் ஒருவரின் புகைப்படத்தால் ஏற்பட்ட விபரீதம் | Facebook Girls Photo Issue

மத்துகம தலைமையக பொலிஸ் பரிசோதகர் பராக்கிரம உடவத்த தலைமையில் குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.