டியூஷன் எடுத்த 10 ஆசிரியர்கள் இடமாற்றம்!

டியூஷன் எடுத்த 10 ஆசிரியர்கள் இடமாற்றம்!

தனியார் பயிற்சி வகுப்புகளை நடத்திய 10 ஆசிரியர்கள் மாகாண கல்வி திணைக்களத்தினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய மாகாணத்தில் , ஆசிரியர்கள் தங்கள் வகுப்பு மாணவர்களுக்குப் பயிற்சி வகுப்பு நடத்தக் கூடாது என்று பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையை மீறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டியூஷன் எடுத்த 10 ஆசிரியர்கள் இடமாற்றம்! | 10 Teachers Who Took Tuition Transferசுற்றறிக்கையை மீறிய பத்து ஆசிரியர்கள் தொடர்பில் மாகாண கல்வி அமைச்சு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

அமைச்சின் பரிந்துரையின் பிரகாரம் திணைக்களம் இதனை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இந்த ஆசிரியர்களில் பலர் இடமாற்றத்தை ஏற்காமல் மேல்முறையீடு செய்துள்ளதாகவும், இது தொடர்பாக தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரியவருகிறது .

அதேசமயம் மேன்முறையீட்டு விசாரணையின் பின்னர் ஆசிரியர் இடமாற்றத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவர் சேவையை விட்டு விலகியதாகவே கருதப்படுவார் என அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சுற்றறிக்கையை மீறும் ஆசிரியர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு மாகாணக் கல்வி அமைச்சு சோதனைப் பிரிவையும் ஆரம்பித்துள்ளது.

வகுப்புகளுக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு ஆசிரியர்கள் விசேட சலுகைகளை அளிப்பதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் காரணமாக பயிற்சி வகுப்புகளை நடத்த தடைவிதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.