முல்லைத்தீவில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட ஆணொருவரின் சடலம்.

முல்லைத்தீவில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட ஆணொருவரின் சடலம்.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் அழுகிய நிலையில் ஆணொருவரின் சடலம் நேற்று (16) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் வசிக்கும் நபரொருவர் கடந்த புதன்கிழமை (13) காணாமல் போயிருந்த நிலையில் இது தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் தென்னம் காணியொன்றில் இருந்து துர்நாற்றம் வீசியமையால் அங்கிருந்த கிராமவாசி ஒருவர் சென்று பார்த்தவேளை அழுகிய நிலையில் ஆணொருவரின் சடலம் காணப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட ஆணொருவரின் சடலம் | Dead Body Of A Man Was Recoveredஅடையாளம் காணப்பட்ட அந் நபர் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியைச் சேர்ந்த இராசலிங்கம் சுதர்சன் என கூறப்படுகிறது.

சடலத்துக்கு அருகில் ஒரு சோடி பாதணியும், சைக்கிள் ஒன்றும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சம்பவ இடத்துக்குச் சென்ற முல்லைத்தீவு நீதிமன்ற பதில் நீதிபதி எஸ்.கெங்காதரன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி சுபுண் ஏக்கநாயக்க மற்றும் கிராம சேவையாளர் வே.மேகானந்தசிவம் ஆகியோர் சடலத்தை பார்வையிட்டனர்.

அத்துடன் தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் பரிசோதனைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

தற்போது சடலம் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முல்லைத்தீவில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட ஆணொருவரின் சடலம் | Dead Body Of A Man Was Recovered

முல்லைத்தீவில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட ஆணொருவரின் சடலம் | Dead Body Of A Man Was Recovered