இன்று காலை இடம்பெற்ற துயரம் - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவர் கவலைக்கிடம்..!
வாகன விபத்து ஒன்றினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 நபர்கள் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்தானது இன்று (17) காலை ஹாலிஎல பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 நபர்கள் அவர்களின் லுனுகலவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு பண்டாரவளைக்கு திரும்பிக்கொண்டிருந்த போது அவர்கள் பயணித்துக் கொண்டிருந்த வான் வீதியை விட்டு விலகி சுவர் ஒன்றில் மோதியதனால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் தந்தை, தாய் மூன்று மகள்கள் மற்றும் தந்தையின் சகோதரி ஆகியோர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.