சுவிஸில் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கும் இலங்கைத் தமிழர்!

சுவிஸில் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கும் இலங்கைத் தமிழர்!

சுவிட்சர்லாந்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழர் ஒருவர் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுவிஸில் வசிக்கும் ஈழத்தமிழர்களின் நலன் சார்ந்த திட்டங்களுக்கு குரல் கொடுக்கும் பிரதான கட்சியான பசுமை கட்சி சார்பாக சுவிட்சர்லாந்து ஆர்காவ் மானிலம் சார்பாக யாழ் வல்வெட்டித்துறையை பூர்வீகமாகக் கொண்ட செல்வதயாளன் ரிசோத் என்ற இளைஞன் போட்டியிடுகின்றார்.

சுவிஸில் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கும் இலங்கைத் தமிழர்! | Sri Lankan Tamil Contest Parliament Election Swiss

அனைவரும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரிசோத் செல்வதயாளன் அவர்களை வெற்றி பெறவைப்பதன் மூலம் இலங்ககையில் தமிழர் மீது ஶ்ரீலங்கா இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறை திட்டமிடப்பட்ட இன அழிப்புத்தான் என்பதை ஈழத்தமிழர்சார்பாக சுவிஸ் நாடாளுமன்றத்தில் தமிழர் குரல் தொடர்ந்தும் ஒலிப்பதையும் உறுதிப்படுத்த முடியும் என ஆர்காவ் மானில ஈழத்தமிழர்கள் கருத்து தெரிவித்தனர்.

சுவிஸில் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கும் இலங்கைத் தமிழர்! | Sri Lankan Tamil Contest Parliament Election Swissமேலும் இம்முறை சுவிஸ் நாடாளுமன்ற தேர்தலிற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பிரதான கட்சிகள் சார்பாக ஈழத்தமிழர்கள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.