14 வயது மாணவி வன்புணர்வு : ஆசிரிய ஆலோசகர் கைது..!

14 வயது மாணவி வன்புணர்வு : ஆசிரிய ஆலோசகர் கைது..!

   பிரத்தியேக வகுப்பில் 14 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் வன்புணர்வு புரிந்த ஆசிரிய ஆலோசகரை நாரம்மல காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிராந்திய கல்வி அலுவலகத்தில் ஆசிரிய ஆலோசகராக பணிபுரியும் நாற்பத்தைந்து வயதுடைய திருமணமானவர் என தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், பாலியல் வன்புணர்விற்கு உள்ளானதாக கூறப்படும் மாணவியிடம் வாக்குமூலம் பெற்றதை அடுத்து சந்தேகத்தின் பேரில் ஆசிரிய ஆலோசகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

14 வயது மாணவி வன்புணர்வு : ஆசிரிய ஆலோசகர் கைது | Teacher Arrested Sexually Assaulted Schoolgirl

பாலியல் வன்புணர்விற்கு ஆளான மாணவி மருத்துவப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேகநபர் தொடர்பில் நாரம்மல காவல்துறை அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

14 வயது மாணவி வன்புணர்வு : ஆசிரிய ஆலோசகர் கைது | Teacher Arrested Sexually Assaulted Schoolgirl