பெந்தர ஆற்றின் கரையில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு..!

பெந்தர ஆற்றின் கரையில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு..!

பிடிகல காவல்துறை பிரிவுக்குட்பட்ட பெந்தர ஆற்றின் கரையில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த மீட்பு சம்பவம் நேற்று (09) பிற்பகல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 40 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட ஒருவர் என காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

சடலம் 40 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட ஒருவருடையது என ஊகிக்க முடியும் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

பெந்தர ஆற்றின் கரையில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு | Benthara River Dead Body Found

உயிரிழந்தவர் சுமார் 05 அடி 04 அங்குல உயரமும், நீல நிற கோடுகள் கொண்ட குட்டை கை சட்டை அணிந்தவாறு இருந்தாக கூறப்படுகிறது.

சடலம் எல்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிடிகல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.