வங்கிகளில் தொடர்ந்து அதிகரிக்கும் டொலரின் பெறுமதி..!
நேற்றைய தினத்துடன் (06) ஒப்பிடுகையில் இன்றைய தினமும் (07) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 313.85 ரூபாயிலிருந்து 314.34 ரூபாய் ஆகவும் விற்பனை பெறுமதி 328.60 ரூபாயிலிருந்து 329.11 ரூபாய் ஆக அதிகரித்துள்ளது.
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 313.74 ரூபாயிலிருந்து 314.24 ரூபாயாக அதிகரித்துள்ள வேளை , விற்பனைப் பெறுமதி 325 ரூபாயிலிருந்து 325.50 ரூபாய் ஆக அதிகரித்துள்ளது
சம்பத் வங்கியிலும், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதிகள் முறையே 316 ரூபாயிலிருந்து 317 ரூபாய் மற்றும் 326 ரூபாயிலிருந்து 328 ரூபாய் ஆக வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.