திருகோணமலை மாவட்டத்தில் குடைசாய்ந்த லொறி - இருவர் படுகாயம்.

திருகோணமலை மாவட்டத்தில் குடைசாய்ந்த லொறி - இருவர் படுகாயம்.

திருகோணமலை மாவட்டத்தில் மீன் ஏற்றி வந்த லொறி ஒன்று குடைசாய்ந்ததில் இருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 87ம் கட்டை பகுதியில் இன்று (30.08.2023) காலை குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது. 

சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை மாவட்டத்தில் குடைசாய்ந்த லொறி - இருவர் படுகாயம் | Trincomalee Lory Accidentவிபத்தில் காயமடைந்தவர்கள் 48 மற்றும் 30 வயதுடைய திருகோணமலை கந்தளாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது. 

திருகோணமலை மாவட்டத்தில் குடைசாய்ந்த லொறி - இருவர் படுகாயம் | Trincomalee Lory Accident

வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

திருகோணமலை மாவட்டத்தில் குடைசாய்ந்த லொறி - இருவர் படுகாயம் | Trincomalee Lory Accident