உயர்தர மாணவர்கள் இருவர் பொலிஸாரால் கைது.

உயர்தர மாணவர்கள் இருவர் பொலிஸாரால் கைது.

அனுராதபுரத்தில் உயர்தர மாணவர்கள் இருவர் கெக்கிராவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுராதபுர - கெக்கிராவ பகுதியில் உந்துருளிகளை திருடி அதனை விற்பனை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் இருவரும் நீண்டகாலமாக இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயர்தர மாணவர்கள் இருவர் பொலிஸாரால் கைது | Two High Ranking Students Arrested By The Police

இந்நிலையில் சந்தேகநபர்கள் இருவரும் கெக்கிராவ நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டதையடுத்து அடுத்த மாதம் 9ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.