சூரியனை பற்றிய ஆய்வுக்காக ஆதித்யா-எல்1 செயற்கைக்கோள்.

சூரியனை பற்றிய ஆய்வுக்காக ஆதித்யா-எல்1 செயற்கைக்கோள்.

சந்திராயன்-3 திட்டம் வெற்றி பெற்றுள்ள நிலையில் சூரியனை பற்றிய ஆய்வுக்காக ஆதித்யா-எல்1 செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி- எக்ஸ்எல் (சி57) ராக்கெட் மூலம் செப்டம்பர் 2-ம் திகதி விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ.தொலைவில் உள்ள எல்-1 என்று அழைக்கப்படும் சூரியனின் ஒளிவட்டபாதையில் ஆதித்யா-எல்1 செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரியனை பற்றிய ஆய்வுக்காக இஸ்ரோ மேற்கொள்ளும் முதல் விண்வெளி திட்டம் இது. ஆதித்யா-எல்1 என்ற இந்த செயற்கைக்கோள் விண்வெளியில் இருக்கக் கூடிய ஒரு ஆய்வுக் கூடமாக செயல்படவுள்ளது.

சூரியனை பற்றிய ஆய்வுக்காக ஆதித்யா-எல்1 செயற்கைக்கோள் | Aditya L1 Satellite For Solar Study

சூரியனின் ஒளி மண்டலம், நிற மண்டலம், சூரியனின் வெளிப்புற அடுக்குகள், ஒளி வட்டம் ஆகியவற்றை பற்றி ஆய்வு செய்ய இதில் விஇஎல்சி (Visible Emission Line Coronagraph) என்ற தொலைநோக்கி, எஸ்யுஐடி ( Solar Ultraviolet Imaging Telescope) என்ற தொலைநோக்கி, ஏ ஸ்பெக்ஸ்( Aditya Solar wind Particle Experiment) என்ற சூரிய காற்றின் தன்மைகளை ஆய்வு செய்யும் கருவி, சூரிய சக்தியை ஆராயும் பிஏபிஏ ( Plasma Analyser Package for Aditya ), சூரியனின் எக்ஸ்ரே கதிர்கள் மற்றும் வெப்பத்தை கண்காணிக்கும் சோலெக்ஸ் ( Solar Low Energy X-ray Spectrometer), சூரியனின் வெளிப்புற அடுக்குகளில் ஏற்படும் டைனமிக் மாற்றங்களை ஆராயும் ஹெல் 10எஸ் ( High Energy L1 Orbiting X-ray Spectrometer), கிரகங்களுக்கு இடையேயான காந்த புலதன்மையை அளவிடும் மேக்னோ மீட்டர் என்ற 7 முக்கிய கருவிகள் உள்ளன.

ஆதித்யா-எல்1 ஆய்வுத் திட்டத்தின் முழுப் பணிகளும் உள்நாட்டு முயற்சியில் மேற்கொள்ளப்படுகிறது.

ஆதித்யா செயற்கைக்கோள் தற்போது ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதை பிஎஸ்எல்வி- எக்ஸ்எல் (சி57) என்ற ராக்கெட் மூலம், செப்டம்பர் 2-ம் தேதி விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

ஆதித்யா-எல்1 திட்டம் மூலம் சூரியனின் வெளிப்பகுதியில் நிலவும் வெப்ப மாறுபாடுகளை கண்டறிவதுடன், சூரிய புயல்களின் தாக்கங்களையும் கண்டறிய முடியும்.