அதிகாலைவரை கைபேசியில் ‘கேம்’ விளையாடிய குடும்பஸ்தர் பரிதாப மரணம்

அதிகாலைவரை கைபேசியில் ‘கேம்’ விளையாடிய குடும்பஸ்தர் பரிதாப மரணம்

ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்பில் அதிகாலை வரை கைபேசியில் கேம் விளையாடிய தமிழரான குடும்பஸ்தர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பு கொட்டாஞ்சேனை கிறிஸ்டி பெரேரா மாவத்தையில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஒரு குழந்தையின் தந்தையான ஜெயராமன் சுரேந்திரன் (வயது 32 ) என்பவரே உயிரிழந்தவராவார்.

தனது கணவர் தினமும் அதிகாலை 2 மணிவரை கேம் விளையாடும் பழக்கத்தைக் கொண்டவர் என மனைவி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

அதிக நேரம் ஸ்மார்ட் போனில் விளையாடிக் கொண்டிருந்தபோது இரத்த அழுத்தம் காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.