இலங்கை வைத்தியசாலையில் இடம்பெற்ற பகிர் சம்பவம்!

இலங்கை வைத்தியசாலையில் இடம்பெற்ற பகிர் சம்பவம்!

மருத்துவ ஊழியர்களின் தவறினால் பிரசவ நேரத்தில் பிரசவ அறையின் தரையில் வீழ்ந்த சிசு ஒன்று உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13)  பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இலங்கை வைத்தியசாலையில் இடம்பெற்ற பகிர் சம்பவம்! | Sharing Incident In A Sri Lankan Hospitalஅநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள கல்லஞ்சிய என்ற கிராமத்தைச் சேர்ந்த தாய் ஒருவர் தனது குழந்தைப் பிரசவத்துக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதே இந்த துயர சம்பவத்தை  சந்தித்துள்ளார்.

மனைவியின்  பிரசவ நேரத்தில், மருத்துவ ஊழியர்களால் குழந்தையைப் பிடிக்க முடியாமல் அது தரையில் வீழ்ந்துவிட்டதாக குழந்தையின் தந்தை தெரிவித்துள்ளார்.

இலங்கை வைத்தியசாலையில் இடம்பெற்ற பகிர் சம்பவம்! | Sharing Incident In A Sri Lankan Hospital

இதேவேளை, பிரேதப் பரிசோதனையில் குழந்தை கீழே வீழ்ந்துள்ளமை உறுதி செய்யப்பட்டது. குழந்தையின் சடலம் மேலதிக விசாரணைகளுக்காக வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிறந்த சிசு  மருத்துமனையில்  அஜாக்கிரிதையால் உயிரிழந்த சம்பவம்  பெரும் துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.