பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கேட்ட அதிகாரிக்கு நேர்ந்த கதி!

பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கேட்ட அதிகாரிக்கு நேர்ந்த கதி!

 குடும்ப பெண்ணிற்கு வட்அப்ஸ் செயலியின் ஊடாக காட்டி பாலியல் தொந்தரவு மேற்கொண்ட சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் விளக்கறியலில் வைக்கபப்ட்டுள்ளார்.

குறித்த வழக்கு கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (8) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதி ஒன்றில் வசிக்கின்ற 2 பிள்ளைகளின் தாயான குடும்ப பெண்ணிடம் தையல் மெசின் உட்பட பல சலுகைகளை பெற்று தருவதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.

அத்துடன் தனது தகாத புகைப்படத்தையும் வட் அப் செயலியின் ஊடாக குடும்ப பெண்ணின் கைத்தொலைபேசிக்கு தொடர்ச்சியாக அனுப்பியுள்ளார்.

பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கேட்ட அதிகாரிக்கு நேர்ந்த கதி! | Officer Demanded A Sexual Bribe From The Woman

இதனால் அதிர்sசியடைந்த பெண் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு எதிராக சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

அந்த முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் விசாரணை மேற்கொண்டு சந்தேக நபரான 41 வயதான சாய்ந்தமருது பிரதேச செயலக சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை கைது செய்திருந்தனர்.

பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கேட்ட அதிகாரிக்கு நேர்ந்த கதி! | Officer Demanded A Sexual Bribe From The Woman

கைதான உத்தியோகத்தர் பல்வேறு திருமணங்கள் மேற்கொண்டுள்ளதுடன் இவ்வாறு கணவன் அற்ற பெண்கள் மற்றும் தனிமையில் உள்ள பெண்களை நாடி பாலியல் இலஞ்சம் பெற்றுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைதான சந்தேக நபரை கல்முனை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்திய போது ஓகஸ்ட் 21 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.