தாயின் மீதான கோபத்தில் உயிரை மாய்த்த மாணவன்.

தாயின் மீதான கோபத்தில் உயிரை மாய்த்த மாணவன்.

கொழும்பு, தெமட்டகொட பிரதேசத்தில் தாயுடன் ஏற்பட்ட கோபத்தில் 13 வயது மாணவன் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.

அதே பகுதியை சேர்ந்த மாணவனே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விளையாடிக் கொண்டிருக்கும் போது, ​​மாணவனை மேலதிக வகுப்பிற்கு செல்ல தயாராகுமாறு தாய் கூறினார்.


தாயின் மீதான கோபத்தில் உயிரை மாய்த்த மாணவன் | Young Student Commit Suicide

இதனால் ஆத்திரமடைந்த மாணவன் அறைக்குள் சென்று விபரீத முடிவை எடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெமட்டகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்