யுவதி ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை! முன்னாள் காதலனின் வெறியாட்டம்.

யுவதி ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை! முன்னாள் காதலனின் வெறியாட்டம்.

கம்பஹா மாவட்டத்தில் யுவதி ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் கம்பஹா - மினுவாங்கொடை பிரதேசத்தில் நேற்று (31.07.2023) மாலை இடம்பெற்றுள்ளது.

மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய ஆர்.ஷிராந்தி என்ற யுவதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

யுவதி ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை! முன்னாள் காதலனின் வெறியாட்டம் | Girl Brutally Hacked To Death In Sri Lankaஷிராந்தியின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் கத்தியுடன் சென்ற 26 வயதுடைய இளைஞர், அவரைச் சராமரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடியுள்ளார்.

குறித்த இளைஞர் ஷிராந்தியின் முன்னாள் காதலன் என பொலிஸ் விசாரணையில் கூறப்பட்டுள்ளது.

சந்தேகநபரான இளைஞரை  கைது செய்வதற்கான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.