நீச்சல் தடாகத்தில் மூழ்கி இளைஞர் மரணம்.

நீச்சல் தடாகத்தில் மூழ்கி இளைஞர் மரணம்.

லுனுகம, மண்டாவல பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் நீச்சல் தடாகத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நீச்சல் தடாகத்தில் மூழ்கி இளைஞர் மரணம் | Boy Drowns In Swimming Pool Sl

நேற்று(30) சில நண்பர்களுடன் ஹோட்டலுக்கு சென்ற குறித்த நபர், அங்கிருந்த நீச்சல் தடாகத்தை பயன்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், அவர் நீரில் மூழ்கியதாக முதற்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

எனினும், நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் இருந்த அவர், கிரிபத்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடவத்தை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.