வவுனியாவில் வீடுபுகுந்து வாள்வெட்டு -இளம் குடும்ப பெண் பலி.
வவுனியா தோணிக்கல் பகுதியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற வாள் வெட்டு மற்றும் தீ வைப்பு சம்பவத்தில் இளம் குடும்ப பெண் பலியானதுடன் 9 பேர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கடமாகவுள்ளதாக தெரியவருகின்றது.

வவுனியா தோணிக்கல் பகுதியில் வசிக்கும் சுரேஸ் என்பவரது வீட்டில் பிறந்தநாள் நிகழ்வு இடம்பெறவிருந்த நிலையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது 24 வயதுடைய இளம் குடும்ப பெண் பலியானதுடன் அங்கிருந்த 9 பேர் எரிகாயங்கள் மற்றும வாள் வெட்டு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில குறித்த வீடு முற்றாக எரிந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தொடர்பான விசாரணையை வவுனியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.