கொழும்பில் கோர விபத்து: 11 வயது சிறுவன் உட்பட இருவர் உயிரிழப்பு..!
கொழும்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 வயது சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் கொழும்பு - சீதவாக்கை பிரதேசத்தில் நேற்று(19.07.2023) இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டி ஒன்றும் ஹயஸ் வானும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து சம்பவத்தின் போது முச்சக்கரவண்டி சாரதியான 38 வயதுடைய குடும்பஸ்தர் சம்பவ இடத்திலும், அதில் பயணித்த 11 வயது சிறுவன் வைத்தியசாலையிலும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், விபத்து தொடர்பில் ஹயஸ் வானின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.