வவுனியாவில் கைக்குண்டு மீட்பு: பொலிஸார் விசாரணை..!

வவுனியாவில் கைக்குண்டு மீட்பு: பொலிஸார் விசாரணை..!

வவுனியா, தோணிக்கல் பகுதியில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (14.07.2023) வவுனியா, தோணிக்கல்,லக்சபான வீதியில் பராமரிப்பு அற்ற காணியை சுத்தம்செய்யும்போதே இவ்வாறு கைக்குண்டு பொது மக்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து குறித்த காணிக்கு சென்று பொலிஸார் கைக்குண்டை மீட்டெடுத்துள்ளனர்.

குறித்த கைக்குண்டு இன்னும் இயங்கு நிலையில் காணப்படுகின்றதா? அல்லது செயழிழந்த நிலையில் காணப்படுகின்றதா? என்பதை ஆராய்வதற்கு பாதுகாப்பு பிரிவினருக்கு பொலிஸாரினால் தகவல் வழங்கப்பட்டதையடுத்து, அவர்கள் கைக்குண்டை பாதுகாப்பான முறையில் அங்கிருந்து அகற்றியுள்ளனர்.