சிறுவன் செலுத்திய ஜீப் வண்டி மோதி விபத்து: ஐவர் வைத்தியசாலையில் அனுமதி..!

சிறுவன் செலுத்திய ஜீப் வண்டி மோதி விபத்து: ஐவர் வைத்தியசாலையில் அனுமதி..!

குளியாப்பிட்டிய ஷொருகம சந்தியில் சிறுவர் ஒருவர் செலுத்தியதாகக் கூறப்படும் அதி சொகுசு ஜீப் வண்டி பாடசாலை பேருந்து ஒன்றுடன் மோதியதில் ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கட்டுள்ளனர்.

குறித்த விபத்தில் நான்கு மாணவர்களும் மற்றுமொரு நபரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸ் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.

குளியாப்பிட்டியிலிருந்து பன்னல நோக்கிச் சென்ற ஜீப்வண்டியானது, வலதுபுறப் பாதையில் அதிவேகமாகச் சென்ற பல வாகனங்களை முந்திச் சென்றதாகவும், வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பாடசாலைச் சேவைப் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மீதும் மோதியதாக அங்கு கூடியிருந்த மக்கள் தெரிவித்துள்ளனர். 

சிறுவன் செலுத்திய ஜீப் வண்டி மோதி விபத்து: ஐவர் வைத்தியசாலையில் அனுமதி | Vehicle Accident Driven By A Boy Kuliyapitiya

இந்நிலையில் விபத்தின் போது பேருந்தில் பயணித்த 16 வயதுடைய மாணவர் மற்றும் 13 வயதுடைய இரு மாணவர்கள், மோட்டார் சைக்கிளில் பயணித்த சாரதி மற்றும் பின்னால் பயணித்த மாணவர் ஒருவருமே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை குளியாபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.